சென்னை அம்பத்தூரில் முகநூல் மூலம் ஏற்ப்பட்ட பழக்கத்தில் 4 பேரிடம் ஐசிஐசி வங்கியில் வேலை வாங்கி தருதாக கூறி 40 இலட்சம் நிதி மோசடி செய்த வாலிபர் கைதுசெய்யப்பட்டமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
வெங்கடபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஸ்குமார் கடந்த ஒரு மாதம் முன்பாக குறிஞ்சி பாடியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரிடம் முகநூலின் மூலம்; ஏற்பட்ட பழக்கத்தில் ஐசிஐசி வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பி ராஜமாணிக்கம் சுஜித்ரா, திவ்யா உள்ளிட்ட நான்கு நாண்பர்கள் ஒன்றிணைந்து ரூபாய். 40 இலட்சம் பணம்கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து ஒரு மாதமாகியும் வேலையும் இல்லை பணமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜமாணிக்கம் அம்பத்தூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து ஹரிஸ்குமாரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் வேலை வாங்கி தருவதாக கூறி பலப்பேரிடம் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
#Forgery #BankVacancy #ICICIBanck #Robery #IndianNews #Ambatur #PoliceInquiry #CrimeNews #TamilNewsKing
0 comments:
Post a Comment