ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கை ”4ஜி”க்கு படிப்படியாக மாற்றத் தொடங்கியுள்ளன.
ஜியோவின் வருகைக்குப் பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள புதிய யுக்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் 10 சர்க்கிள்களில் 2ஆம் மற்றும் 3ஆம் தலைமுறை நெட்வொர்க்களில் இருந்து 4ஆம் தலைமுறை நெட்வொர்க்கிற்கு மாற்றி அமைத்துள்ளது.
இதேபோல் வோடபோன் நிறுவனம் மும்பையில் 4ஜி சேவைகளை மறுசீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தரமான மொபைல் பிராண்ட்பேண்ட் சேவையை பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
அசாம், பீகார், ஜம்மு காஷ்மீர், ஒரிசா, உ.பி., கிழக்கு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 6 சர்க்கிள்களில் 900 MHz ஏர்வேவ்ஸை ஏர்டெல் செயல்படுத்தியுள்ளது. இவை அரசு நிர்ணயித்த விலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 2100 MHz ஏர்வேவ்ஸை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மும்பையைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய அலைக்கற்றை மாற்றத்திற்கு வோடபோன் நிறுவனத்திற்கு காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்நிறுவனத்தின் பழைய நெட்வொர்க் உபகரணங்கள், 900 MHz பேண்ட்டின் 4ஜி LTE சேவைக்கு ஒத்துழைக்கும் நிலையில் இல்லை.
சமீபத்தில் புதிய உபகரணங்கள் மாற்றம் செய்ய ஒப்பந்தங்கள் வழங்கி வோடபோன் நிறுவனத்தின் இந்தியத் தலைமை உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment