இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்த விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளிடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த இவர்கள் ஒன்றாக இணைந்து வெளிநாடு செல்ல முற்பட்ட வேலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சியபலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்த 23 பேரும், வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரும், கதிர்காமத்தைச் சேர்ந்த 11 பேரும், ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமாக 38 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 6 பேர் ஆட் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட விரோத ஆட் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இரு கார்கள், ஒரு வேன் மற்றும் லொறி என்பனவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சியம்பலாந்துவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு இவர்களை கைது செய்யும் போது மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள், கார் மற்றும் லொறி என்பனவும் திஸ்ஸமஹாராம - சியம்பலாந்துவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment