திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் இருந்த ஒரு கிலோ கிராம் எடையுள்ள 3 தங்க கிரீடங்கள் காணவில்லை.
தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் பேரில் திருப்பதி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருப்பதியில் இருக்கும் கோவிந்தராஜ சாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளான கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு அணிவிக்க பயன்படுத்தப்படும் மூன்று தங்க கிரீடங்களை இன்று மாலை முதல் காணவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான உயர் அதிகாரிகள், தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு கோவில் அதிகாரிகள் தகவல் அளித்தனர்.
கோவிந்தராஜ சாமி கோவிலுக்கு விரைந்து வந்த தேவஸ்தான உயர் அதிகாரிகள், விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் ஆகியோர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தங்கக் கிரீடங்கள் மாயமானது உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு தேவஸ்தான வரித்துறையினர் திருப்பதி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் தங்க கிரீடங்கள் மாயமானது பற்றி புகார் அளித்தனர்.புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எஸ்பி அன்பு ராஜன் தலைமையில் நேற்று காலை முதலில் பணியில் இருந்த அர்ச்சகர்கள் ஊழியர்கள் ஆகியோரை கோவிலுக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இதனால் தேவஸ்தான வட்டாரங்களில் மட்டுமல்லாது, பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.இந்த நிலையில் தங்க கிரீடங்கள் காணாமல் போனது பற்றி கோவிலுக்குள் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணைக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த எஸ்பி அன்பு ராஜன், இரவு 9 மணபற்றிய 1300 கிராம் எடையுள்ள மூன்று தங்கள் இடங்களில் காணவில்லை என்று தேவஸ்தானம் துறையினர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருப்பதி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி இருக்கிறோம். இதற்காக திருப்பதி குற்றத்தடுப்பு காவல் நிலைய டிஎஸ்பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கு காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். தங்க கிரீடங்கள் திருட்டு தொடர்பாக சில தடயங்கள் கிடைத்துள்ளன.விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று அப்போது கூறினார்.
Home
India News
Slider
Videos
திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் இருந்த ஒரு கிலோ கிராம் எடையுள்ள 3 தங்க கிரீடங்கள் காணவில்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment