வசதிக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத் தொகையிலும் விட, கூடுதலான தொகையை சட்ட விரோதமாக அறிவிடும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வசதிக்கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத்தை அறிவிடுவதற்கு, தேசிய பாடசாலையாயின் கல்வி அமைச்சின் செயலாளர்கள், மாகாணப் பாடசாலையின் மாகாணகல்வி செயலாளர்களின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சுற்றறிக்கையை மீறி பாடசாலை அதிபர்கள் கட்டணங்களை அறிவிட முடியாது.
இது தொடர்பான முறைப்பாடுகளை 1998 என்ற உடனடி தொலைபேசி ஊடாக கல்வி அமைச்சுக்குக்கு பொதுமக்களால் அறிவிக்க முடியும்.
இது மட்டுமன்றி பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களுக்காக ஆசிரியர்களிடம் அதிபர்கள் தொடர்ச்சியாக பணம் அறவிடுதல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது தொடர்பில் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment