கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 வயதுச் சிறுவன் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளான்.
கிளிநொச்சி தர்மரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் கசிப்பு மற்றும் நான்கு பரல் கோடாவைக் கைப்பற்றினர். சந்தேகத்தின் பெயரில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் சிறப்பு மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினர் குறித்த குற்றச்செயலை முறியடித்தனர்.
பொலிஸ் அதிகாரி சத்துரங்க தலைமையில் சென்ற ஏழு பேர் அடங்கிய குழுவினர் சிறுவனைக் கைது செய்தனர்.
0 comments:
Post a Comment