இலங்கையில் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைவரும் இன மத பேதம் இன்றி சமாதானத்துடனும், சகவாழ்வுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் மன்னாரைச் சேர்ந்த 38 வயதான அன்ரன் கிருஸ்னன் டயஸ் என்பவர் தரையில் உருண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த அன்ரன் கிருஸ்னன் டயஸ் ஆன்மீக மற்றும் ஆயுள்வேத , சித்த மருத்துவ ரீதியில் தேர்ச்சி பெற்றவர். இவர் மன்னார் தள்ளாடியில் இருந்து அநுராதபுரம் வரை தரையில் உருண்டு செல்லும் நல்லிணக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நாள் ஒன்றுக்கு சுமார் 5 கிலோ மீற்றர் தரையில் உருண்டு செல்லவுள்ளார். நேற்று மன்னாரில் இருந்து ஆரம்பித்த பயணம் திருக்கேதீஸ்வரம் , மடு ஊடக எதிர்வரும் 40 நாள்களில் அநுராதபுரத்தைச் சென்றடையுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment