மன்னார் மனித புதை குழி அகழ்வு பணியானது 149 வது நாளாக தொடர்ச்சியாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்று வருகின்றது.
தொடர்ச்சியாக ஆய்வு முடிவுகள் வெளிவரும் என எதிர் பார்க்கபட்ட போதும் குறித்த பரிசோதனையை நடாத்திய ஆய்வு நிறுவனத்தின் ஊடக நேரடியாக மன்னார் நீதி மன்றத்திற்கு எந்த முடிவுகளும் அனுப்பிவைக்கபடாத காரணத்தினால் சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்ட ஆவணமானது இன்னமும் வெளியிடப்படவில்லை.
அதே நிலையில் நேற்றைய தினம் குறித்த புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பாகவும் ஆகழ்வுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதா என்பது தொடர்பாகவும் மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணியின் நிர்வாக கட்டமைப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் மன்னார் நீதி மன்றத்தில் கூட்டம் ஒன்று இடம் பெற்ற நிலையில் குறித்த கூட்டத்தில் மன்னார் நீதவான் நீதி மன்ற நீதிபதி சட்டவைத்திய அதிகாரி காணமல் போனோர் அலுவலக பிரதிநிதி மிராக் ரஹீம் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் கலந்து கொண்டதாக அறிய முடிகின்றது அதே நேரத்தில் இன்றைய தினமும் வளமை போன்று அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
இதுவரை குறிப்பிட்ட வளாகத்தில் இருந்து 323 மேற்பட்ட முழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 314 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
0 comments:
Post a Comment