எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடல் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோதே இரு படகுகளுடன் 9 பேர் கைதாகினர்.
இது தவிர கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த மேலும் நான்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று இந்திய செய்திகள் கூறுகின்றன.
நேற்று முன்தினம் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் 25 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment