10000 மாணவர்கள் விநோத சபதம்

குஜராத் மாநிலத்தில் 10,000 பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள், நாங்கள் காதலித்தாலும் பெற்றோரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என சபதம் எடுத்துள்ளனர்.


உலகம் முழுவதிலும் காதலிக்கும் ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி கொள்ளும் விதமாக இன்று காதலர் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்த தினத்தில் ஒவ்வொரு காதலர்களும் வினோதமாக ஏதேனும் ஒரு சபதத்தை எடுப்பது வழக்கம். ஆனால் இந்முறை குஜராத்தை சேர்ந்த சில மாணவர்கள், அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஒரு சபதத்தினை எடுத்துள்ளனர். இதுகுறித்து 'Laughter club, Crying club’ என்னும் அமைப்பை நிர்வகித்து வரும் சிரிப்பு சிகிச்சை நிபுணரான ”ஹஸ்யமேத்வா ஜயதே” சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

என்னிடம் பல இளைஞர்கள் தங்களுடைய மனஉளைச்சல் பற்றி பேசுவதற்காக வருவார்கள். அதில் பெரும்பாலான இளைஞர்கள், தங்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க மறுப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். இதற்காக நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அதில், 20 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக இணைந்து, தங்களுடைய பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வோம் என சபதம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment