மைத்திரிக்கு அதிர்ச்சி கொடுத்த பொன்சேகா!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
தன்னுடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே தனக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பிற்கமைய அமைச்சர் பதவி பிரதமரினால் பெயரிட்ட பின்னர் ஜனாதிபதியினால் அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பதவிகளை அதிகரிப்பதற்காக புதிய யோசனை ஒன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அதனை சமர்ப்பித்த பின்னர் மேலும் சில அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு நியமிக்கப்பட வேண்டிய அமைச்சர்களில் தனது பெயரும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கமையவும் தன்னை அமைச்சராக நியமிக்கவில்லை என்றால் தான் உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment