வாகனத்தின் பின் சக்கரம் வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
சிற்றூந்து ஒன்றே சக்கரம் வெடித்ததில் வீதியை விட்டு விலகி விபத்துகுள்ளானது.
மாத்தறை கொடகம தெற்கு அதிவேக வீதியில் நேற்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவர் கராப்பிடிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment