லண்டன் மாநகாின் ஹீத்ரோ விமான நிலையத்தின் விமானச் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் முதன்மையான மற்றும் மிகவும் பரபரப்பான விமான நிலையத்தினருகே ஆளில்லா விமானமொன்று அவதானிக்கப்பட்டதை அடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புறப்படுதல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் லண்டனின் இரண்டாவது பரபரப்பு மிகுந்த கட்விக் விமான நிலையத்தின் மேலாகவும் ஆளில்லா விமானம் பறந்து சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், இதனால் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் சுமார் ஆயிரம் விமானச் சேவைகள் வரை இடைநிறுத்தப்பட்டதுடன், இதனால் சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment