ஆப்கன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.ஆப்கன் மொழியில் பாடும் அவரை உற்றுப்பார்த்தால் உண்மையில் அது ட்ரூடோ அல்ல என்பது தெரிகிறது.
பாடகரான Abdul Salam Maftoon, ஆப்கனின் நம்பர் ஒன் இசை நிகழ்ச்சி என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடி வருகிறார்.
பல சுற்றுக்களை வெற்றிகரமாக முடித்து தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும் Maftoon, சலாம் ட்ரூடோ அல்லது ஆப்கன் ட்ரூடோ என்றே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கனடா பிரதமர் ட்ரூடோவைப் போலவே காட்சியளிக்கும் Maftoon, ஆப்கனின் Badakhshan மாகாணத்தைச் சேர்ந்தவர். சட்டென Maftoonஐப் பிடித்துக் கொண்ட சமூக ஊடகங்கள் அவருக்கும் ட்ரூடோவுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிட, அவரது வீடியோ சூடு பிடித்துள்ளது.
0 comments:
Post a Comment