யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவந்த இராணுவ சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான என்.ஜி.வை. ஆரியரட்ண என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
பலாலியில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பயிற்சி முகாமில் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாலி இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment