சாமி 2 படத்திற்கு பிறகு விக்ரம், கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் நடிக்கும் 56 ஆவது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பதாக சொல்லப்பட்டது.
விக்ரம் வயதுக்கு அக்ஷரா ஹாசன் ஜோடியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களே என்ற கருத்து நிலவிய நிலையில் சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் படத்தின் டீசர் அதற்கு விடையாக அமைந்துள்ளது.
அந்த டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளின்படி விக்ரம் சற்று வயதானவராக நடிக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியில்லை என்று சொல்லப்படுகிறது. அக்ஷராவுக்கு ஜோடியாக வேறு ஒருவர் நடித்திருக்கிறார்.
தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தை ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர உள்ளனர்.
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் அவருக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டம் கிடைத்தது. இந்தப்படத்துக்கும் வரலாற்று சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை, டோன்ட் பிரீத் என்ற ஆங்கிலப்படத்தில் தழுவலே இந்தப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment