திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுந்தரராஜனின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஊடகவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
யாழ் ஊடக அமையம் மற்றும் வடக்கு, கிழக்கு கொழும்பு ஊடக அமைப்புக்களின் ஒருங்கினைப்பில் யாழ் பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.
ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுச்சுடரை ஏற்றி வைத்து ஆர்ப்பாட்டப் பாட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் "கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் குற்றவாளிகளுக்கு எதிராக விசாரணையை வலியுறுத்தியும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
" ரணில் மைத்திரி அரசே நல்லாட்சி வேடம் போடாதே" "மிரட்டாதே மிரட்டாதே ஊடகவியலாளர்களை மிரட்டாதே" காட்டதே காட்டாதே ஊடகவியலாளர்களைக் காட்டிக் கொடுக்காதே" காட்டு காட்டு கொலையாளிகளைக் காட்டு" காப்பாற்றாதே காப்பாற்றாதே கொலையாளிகளைக் காப்பாற்றாதே உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பட்டன.
0 comments:
Post a Comment