ஹிட்லர் வரைந்ததாக அறிமுகம் செய்யப்பட்டு ஜேர்மனியில் ஏலத்தில் விடப்பட்ட 3 ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாஜி அமைப்பை தொடங்குவதற்கு முன்னர் ஓவியர் ஆக வேண்டும் என்பது ஹிட்லரின் ஆசையாக இருந்துள்ளது. அவர் அதிகமான ஓவியங்களை வரைந்துள்ளார்.
இந்தநிலையில் பெர்லினிலுள்ள Kloss ஏல இல்லத்தில் 1910 ஆம் ஆண்டு ஹிட்லர் வரைந்ததாக கூறப்பட்டு அவரது ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்ததையடுத்து, அங்கு சென்று சோதனை செய்ததில், அது ஹிட்லர் வரைந்த ஓவியமே இல்லை என்பது கண்டறிப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment