வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரான சுரேன் ராகவன் தமது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம், பழைய பூங்கா வளாகத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை பத்து மணியளவில் மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே, அண்மையில் ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய ஆளுநராக சுரேன் ராகவனை ஜனாதிபதி நியமித்தார்.
இந்நிலையில், இன்று காலை வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்த புதிய ஆளுநர் சுரேன், தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment