நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவது பெரும் கவலையளிக்கின்றதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் கூட்டு எதிரணி உறுப்பினர்களுடன் மஹிந்த தேசப்பிரிய நேற்று கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த தேசப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“மாகாண சபை தேர்தலை பழைய முறைப்படி நடத்துவதே சிறந்தது. அந்த வகையில் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் ஊடாக எவராவது நடவடிக் கைகளை மேற்கொள்வாராயின் அது வரவேற்கத்தக்க விடயமாகும்.
மேலும் தேர்தலை நடத்தாமல் தாமதப்படுத்துவதால் மக்களின் வாக்குரிமையே இழுத்தடிப்புக்கு உள்ளாகின்றது” என மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment