பிரித்தானியாவின் வேல்ஸ் கடற்கரையில், அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தட்டைச் சுறா பல ஆண்டுகளுக்குப் பின் தென்பட்டுள்ளதால் கடல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏஞ்சல் ஷார்க் எனப்படும் தட்டைச் சுறா, ஆழ்கடலில் கடல் மணலில் பதுங்கியிருந்து வேட்டையாடும் தன்மை கொண்டது. ஆனால் இந்த உயிரினம் அழிந்துவிட்டதாக கருதப்பட்டது.
வரைமுறையற்ற வேட்டை வாழ்விடங்களில் தொந்தரவு மற்றும் மாசுபாடு ஆகியவற்றால் இந்த சுறா இனம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து காணப்படவில்லை. இதன் காரணமாகவே இந்த இனம் அழிந்துவிட்டது என்று ஆய்வாளர்கள் கருதினர்.
இந்நிலையில், பிரித்தானியாவின் ஹோலிஹெட் பகுதியில் உள்ள வட வேல்ஸ் கடற்கரையில் இந்த தட்டைச் சுறாவை சில மீனவர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுப் பகுதியில் கடலில் துள்ளி விளையாடிய சுறா ஒன்றின் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதனை ஆய்வு செய்ததில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தட்டைச் சுறா தான் அது என்று தெரிய வந்தது. இதனால் கடல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment