மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாதவாறே புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப் பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிற்கு பருத்தித்துறை நகரில் வரவேற்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாணசபைக்கு கொடுக்க ப்படுகின்ற அதிகாரங்கள் மீளப்பெற முடியாதவாறு இருக்கவேண்டும்.
அதாவது கொடுக்கப்படும் அதிகாரங்கள் குறித்து மத்திய அரசில் சட்டம் இயற்ற முடியாதவாறு அமைய வேண்டும்.
இவ்விடயங்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அதனால்தான் நாங்கள் இதனை சமஷ்டிக்குரிய குணாம்சம் என்று கூறுகின்றோம்.
ஆகவே அரசியல் அமைப்பு மீறப்படுகின்றபோது அதனைத் தடுக்கவேண்டிய தேவை ஏனைய சமூகத்தைவிட எமது சமூகத்தில் அதிகமாக இருக்கின்றது.
இங்கு ஜனநாயகம் மீறப்படுகின்றபோது அதிகளவில் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள்தான். ஆனால் ஒட்டுமொத்தமாக நாட்டிலே ஜனநாயகம் மீறப்படுகி ன்றபோது எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியது அவரது கடமையாகும்” என சுமந்திரன் மேலும் தெரிவி த்துள்ளார்.
0 comments:
Post a Comment