ஒரு சடலம் தகனம் செய்வதற்கு ஜனவரி மாத்திலிருந்து ரூபா ஆயிரம் வரி அறவிடவேண்டுமென்று பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் ஏகமனமதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வலி.தென்மேற்கு பிரதேசத்தில் 14 இந்து மயானங்கள் இருக்கின்ற நிலையில். ஒரேயொரு மயானத்தில் மட்டும் சடலத்தை தகனம் செய்வதற்குப் பிரதேச சபையினால் பணம் அறவிடப்பட்டு வருகின்றுது.
இப்பிரதேசத்திலுள்ள பெரும்பாலான மயானங்கள் பல வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாமையினால் காடு போல் காட்சியளிக்கின்றன. அத்துடன் மழை காலங்களில் எரி கொட்டகை இல்லாததனதினால் சடலங்களைத் தகனம் செய்வதில் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
இந்நிலை குறித்துப் பிரதேச சபைக்குச் சுட்டிக்காட்டிய பொது மக்கள் மயானங்களை அபிவிருத்தி செய்து தருமாறு கோரியிருந்தனர்.
இதற்கமைய மயானங்கள் பல இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரகின்றன. இதையடுத்து பிரதேச சபையின் வருமானத்தைக் கருத்தில் கொண்டு ஜனவரி மாத்திலிருந்து ஆயிரம் ரூபா வரி அறவிடவேண்டுமென்று சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது..
0 comments:
Post a Comment