கொழும்பு, கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொட்டகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொட்டகலை ரொசிட்டா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் சிவனொளிபாதமலை பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று மோதியது.
இவ்வாறு விபத்துக்குள்ளான பாரவூர்தி அதற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியது.
அதி வேகமே விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மதியம் நடந்த இந்த விபத்தில் வேனில் பயணித்த இளைஞர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஹற்றனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் பேருந்து நிலையத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வாகனம் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டபோதே விபத்து நேர்ந்ததாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment