ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, அதிரடியான சம்பவங்களுடன் படமாகத் தயாரிக்கிறார் இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்த ப்ரியதர்ஷினி.
”தி அயர்ன் லேடி” என்ற பெயருடைய இப் படத்தில், மலையாள நடிகை நித்யா மேனன், ஜெயலலிதாவாக நடிக்கிறார்.
எம்.ஜி.ஆராக, பிரபல மலையாள நடிகர் சுகுமார் நடிக்கிறார். சசிகலா கேரக்டரில் வரலட்சுமி நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதாவைப் போலவே அனைத்துக் காட்சிகளும் படத்தில் ஒத்து இருக்க வேண்டும் என்பதால், ஜெயலலிதா குறித்த நிறைய தகவல்களை, அவரோடு பழகியவர்கள், புத்தகங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பவை என எல்லா தரப்பில் இருந்தும் திரட்டி வருகிறார் நித்யா மேனன்.
0 comments:
Post a Comment