வீதியில் குறுக்கிட்ட நாயால் நடந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் - காங்சேன்துறை பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியில் பயணித்த வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விலகி மின்சார தூணில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச செயலக பிரிவிற்கு சொந்தமான வாகனமே நேற்றைய தினம் இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

வீதியில் குறுக்கிட்ட நாய் ஒன்றை காப்பாற்றுவதற்காக சாரதி வேனை திருப்பியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது வேனில் காரைநகர் பிரதேச செயலாளரும், சாரதியும் பயணித்துள்ள நிலையில், அவர்கள் இருவரையும் பிரதேசவாசிகள் காப்பாற்றியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment