பாரவூர்தி மோதி பெண்கள் இருவர் உயிரிழப்பு

சாலையில் பயணித்துக் கொண்டிருந்த  பெண்கள் இருவர் பாரவூர்தி மோதி உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி - கொழும்பு பிரதான வீதியில் அளுத்கமை, களுவோமோதர பிரதேசத்தில் இன்று அதிகாலையில் நடந்துள்ளது.

காலி  நோக்கிப் பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியே  வேககட்டுப்பாட்டை இழந்து பெண்களுடன் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 40 மற்றும் 60 வயதுடைய அளுத்கமை - களுவோமோதர - சீலாநந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களே சாவடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment