டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகம் அமைப்பதற்கு அரச நிதி பயன் படுத்தப்பட்டதாக கோட்டா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு ள்ளன. இது தொடர்பாக இன்று முதல் தினமும் விசாரணை நடத்துவதற்கு விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் கோட்டா இன்று விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரகெட்டிய பகுதியில் நிர்மாணி க்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, 33 மில்லியன் ரூபாய் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக கோட்டா உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்கு ஆரம்பத்தில் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் விசாரிக்கப்பட்டு வந்ததோடு, பின்னர் விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment