பிறக்கவிருக்கும் சீன புத்தாண்டை முன்னிட்டு விசேட இராசிச் சின்னம் பொறிக்கப்பட்ட புதிய முத்திரைகளை ஹங்கேரியா அரச அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஹங்கேரியா தலைநகர் புடாபெஸ்ட் நகரில் உள்ள மிலேனியம் பார்க் அரங்கில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஹங்கேரியாவிற்கான சீன தூதுவர் டுவான் ஜியாலோங் மற்றும் ஹங்கேரியா அதிகாரிகள் முதலாவது முத்திரையில் கையெழுத்திட்டு, பொது விநியோகத்தை ஆரம்பித்து வைத்தனர்.
ஹங்கேரியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், அதனை போற்றும் வகையில் இந்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளதாக ஹங்கேரியா அரச அஞ்சல் திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சீனாவின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாக சீனப் புத்தாண்டு அல்லது வசந்த விழா விளங்குகிறது. இவ் பாரம்பரிய விழா தொடர்ந்து மூன்று தினங்களுக்கு கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி சீன புத்தாண்டு பிறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment