வேளச்சேரியில் புதிய துணைமின் நிலையம் -அமைச்சர் தங்கமணி
வேளச்சேரியில் புதிய துணை மின்நிலையத்திற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது வேளச்சேரியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று வாகை சந்திரசேகர் (தி.மு.க.) கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-
'தமிழ்நாட்டில் 1600 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளச்சேரியில் பூமிக்கு அடியில் மின் கம்பி வடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. உறுப்பினர் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து புதிய துணை மின் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.
0 comments:
Post a Comment