பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை மேக்ரான் அரசு அதிகரித்ததன் காரணமாக பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி முதல் மஞ்சள் மேலாங்கி போராட்டம் இன்று வரையிலும் நடந்து வருகின்றது.
அரசுக்கு எதிராக நடந்து வரும் மஞ்சள் அங்கி போராட்டத்தால் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களால் முன் அனுமதி பெறாமல் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் எடுவர்ட் பிலிப் கூறியதாவது: “போராட்டங்கள் குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. மேலும், அங்கீகாரம் பெறாமல் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் விதிகளுக்கு முரணானது விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்றுத் தரும் புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், அதிபர் இமானுவல் மேக்ரானின் சலுகை அறிவிப்புக்குப் பிறகு சற்று தீவிரம் குறைந்தாலும், இந்த வாரம் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment