தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துவரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுரேந்தர் ரெட்டி இயக்கி வரும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது, சிரஞ்சீவி - தமன்னா இடம்பெறும் வசன காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்ததாக ஒரு பிரமாண்ட பாடல் காட்சி ஐதராபாத்தில் படமாகிகிறது.
மொத்தம் 12 நாட்கள் படமாக்கப்படும் இந்த பாடலில் சிரஞ்சீவி, தமன்னாவுடன் ஆயிரம் நடன கலைஞர்களும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment