குருநாகலை நாரமல மொரகனே பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கருகில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த அறுவர் நாரமலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது கடுபொத, கடஹார மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த 25 -73 வயதுகளுக்கு இடைப்பட்ட ஆறு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சட்டவிரோதமான முறையில் எதுவித அனுமதி பத்திரமும் இன்றி புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த அறுவர் நேற்று மாலை 2.50 மணியளவில் புதையல் தோண்ட பயன்படுத்திய பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட அறுவரையும் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள நாரமல பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment