இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு, மன்னார், பள்ளிமுனை பள்ளிக்குடா பூநகரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் இடம் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
வடமாகாண மீன்பிடி இணைய ஒன்றுகூடல் நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் யாழ்ப்பாணம் யாழ்பாடி விருந்தினர் விடுதியில் மாகாண மீனவர் இணைய தலைவர் ஆலம் தலமையில்இடம் பெற்றது.
இந் நிகழ்வில் தலமை உரையாற்றும் போதே ஆலம் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் கேமன் குமார, சிறப்பு விருந்தினராக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசு தாசன், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க யாழ்ப்பாண தலைவர் இ.முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட்ட நான்கு மாவட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
வட மாகாண மீனவர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து தீர்ப்பதற்க்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக இணைய முகாமைத்துவ செயலணி ஒன்றினூடாக துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் அழைத்து தீர்க்க முயற்சிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment