வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியிலுள்ள வீடொன்று இன்று அதிகாலை தீப்பற்றியுள்ளது.
கிடுகினால் ஆன குறித்த குடிசை வீட்டுக்கு இனந் தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் உரிமையாளர் அரச காணியில் அத்துமீறி குடியமர்ந்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையிலேயே வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment