மனைவியை கத்தியால் வெட்டி கணவன் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று ராகமை - கனேமுல்லை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கனேமுல்லை பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய தனியார் மருத்துவமனையில் தாதியாக கடமை புரியும் பெண் ஒருவரே இவ்வாறு கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தான் கடமையாற்றும் மருத்துவமனை வைத்தியர் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக் கொண்டுள்ளமையை அறிந்து கொண்ட கணவர் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் குறித்த பெண், வைத்தியருடன் ஏற்படுத்திக்கொண்ட தகாத உறவை நிறுத்திக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வழமை போன்று ஒரு நாள் குறித்த பெண் கடமைக்குச் சென்ற பின்னர் தனியார் விடுதியில் வைத்தியருடன் மனைவி இருப்பதாக கணவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து கோபமடைந்த கணவர், மனைவி வீடு திரும்பியவுடன் அவரை கோபம் தீரும் வரை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சரணடைந்தவரை கைது செய்த பொலிஸார் மனைவியை பார்வையிட அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த மனைவி றாகமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பெண்ணுடன் தகாத உறவை வைத்திருந்த வைத்தியரும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment