அதிபரின் தாக்குதல் மாணவி பலத்தகாயம் - வவுனியாவில் அதிர்ச்சி!

வவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரின் பணம் திருட்டுபோன சம்பவம் தொடர்பிலேயே, பாடசாலை மாணவி மீது நேற்று முன்தினம் பாடசாலை அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸாரிற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,

இதுவரையில் ஓமந்தை பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனவும் எனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் உள்ளது ஆகையால் ஊடகங்களும் சமூக அமைப்புக்களும் தான் எனது மகளுக்கு நீதியினை பெற்றுத்தரவேண்டுமென தெரிவித்துள்ளார்.




Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment