சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, முனையக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
900 லீற்றர் கோடா 46 லீற்றர் கசிப்பு காஸ்சிலின்டர் 2 உட்பட கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள் மீட்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்த இருவரையும் கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment