அதிக கட்டணம் அறவிடும் சிவனடிபாதமலை!
சிவனடிபாதமலையில் காணப்படும் உணவகங்களில் அதிகளவு கட்டணம் அறவிடுவதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்துவுக்கு கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன் சிவனடிபாதமலை பருவகாலம் ஆரம்பித்து 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், இம்முறை கடந்த காலங்களை விட அதிகளவான யாத்தீரர்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கூறுகையில், இனிவரும் காலங்களில் வாராந்த சுற்றி வலைப்பை மேற்கொள்ள உள்ளதாகவும் இச்சுற்றிவலைப்பில் அதிகளவு கட்டணங்களை அறவிடும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment