முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் நேற்று முன்தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ரோஹித ராஜபக்ச தனது மனைவிக்காக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பாடல் வீடியோவை இணையத்தில் வெளியிட்ட சில மணித்தியாலங்களில் சிறப்பான பாராட்டுகள் கிடைத்துள்ளது.
“அவளது புன்னகை” என பெயரிடப்பட்டுள்ள இந்த காணொளியில் மனைவியை கிராமத்து இளவரசி என அழைத்துள்ளார்.
திருமணத்தில் உள்ள காட்சிகளை கொண்டு இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை தனது காதல் மனைவிக்காக ரோஹித ராஜபக்ஷவே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment