பிரேமம் மலையாள படத்தில் நடித்து புகழ்பெற்ற சாய் பல்லவி, அதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்த போது அவரது கால்சீட்டுக்காக அலைந்து கொண்டிருந்தார்கள்.
தெலுங்கில் அவர் நடித்த பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற படங்கள் வெற்றி பெற்றபோதும் கடைசியாக நடித்த பாடி பாடி லீசி மனசு படம் தோல்வியடைந்து விட்டது.
தமிழில் தியா, மாரி-2 படங்களுக்குப்பிறகு சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்திருப்பவர், மீண்டும் மலையாளத்தில் பகத்பாசிலுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் ராணாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சாய் பல்லவி. தற்போது ராணா, ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருவதால், கோடை விடுமுறையில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். அதனால் அது வரைக்கும் ராணாவிற்காக காத்திருக்கப்போகிறார் சாய்பல்லவி.
0 comments:
Post a Comment