அரசமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு டெல்லியில் இன்று இடம்பெற்றுள்ளது.
டெல்லிக்கு வருகைதந்த நோர்வே பிரதமருக்கு, ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பளம் விரித்து, முப்படை அணிவகுப்பு மரியாதையும் வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து டெல்லியிலுள்ள ஐதராபாத் இல்லத்தில் நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க், பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார்.
மேலும் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆலோசனை கூட்டத்தில் இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment