கட்டுப்பாடுகள் நிறைந்த பிரான்சில் 1873இல் பிறந்தும், அந்த காலகட்டத்திலேயே மூன்று திருமணங்கள், பெண்களுடன் பாலுறவு, மகனுடன் முறைதவறிய உறவு, இவற்றிற்கிடையில் ஏராளமான நாவல்கள், அவற்றில் ஒன்றிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை என புரட்சி பெண்ணாக விளங்கிய ஒரு எழுத்தாளரின் உண்மைக் கதை இது.
Colette என்ற பெயரைக் கேட்டாலே ஆண்கள் உணர்ச்சிவசப்படுவார்கள், காரணம் அவரது கிளர்ச்சியூட்டும் நாவல்கள். முதன்முதலாக வானில் பலூன் உதவியுடன் பறந்தவர், அழகியல் அறுவை சிகிச்சையும் கூந்தல் சிகிச்சையும் செய்து கொண்ட முதல் பெண்களில் ஒருவர், சொந்தமாக அழகு நிலையம் வைத்திருந்தவர், தன் வீட்டிலேயே சொந்தமாக உடற்பயிற்சி நிலையம் வைத்திருந்தவர் என்று பல சிறப்புகள் இருந்தாலும், Coletteக்கு இன்னொரு முகம் உண்டு.
அது, அந்த காலத்திலேயே ஆண்களுக்கு நிகராக வாழ்ந்த பாலியல் வாழ்க்கை. மூன்று முறை திருமணம், அந்த காலத்திலேயே தனது கணவனின் ரகசிய காதலியுடன் பாலுறவு, 40 வயதில் முதல் குழந்தை, 16 வயது மகனுடன் பாலுறவு என்று வாழ்ந்த Colette தான் வாழ்வில் அனுபவித்த அனைத்தையும் நாவல்களாக எழுதினார்.
ஆனால் அவற்றில் முதல் நான்கு நாவல்களை அவரது பெயரில் வெளிவரவிடாமல், தன் பெயரில் வெளியிட்டு அவற்றிற்கான காப்புரிமையையும் பெற்றுக் கொண்டார் அவளது கணவர்களில் ஒருவரான Henri யைப் பிரிந்து வறுமை வாட்டிய நிலைமையில் பாரீஸ் விடுதி ஒன்றில் நிர்வாண நடனம் ஆடச் சென்றார் இப்படி வாழ்க்கை புரட்டியெடுக்க, இன்னொரு பெண்ணென்றால் காணாமல் போயிருப்பாள்.
ஆனால் Colette மீண்டும் எழுதினார்.பெண்கள் வெளிப்படையாக பாலுறவு குறித்து பேச தயங்கிய காலகட்டத்தில், Coletteஇன் நாவல்கள் பாலுறவைத்தான் பெரிதாக பேசின.பின்னர் தன் வாழ்வில் சந்தித்த ஒரு நபர் பாலுறவை தவிர்த்து நல்ல நாவல்கள் எழுதுமாறு Colette ஐக் கேட்டுக் கொள்ள, அதன்பிறகு அவர் எழுதிய புத்தகங்களில் ஒன்று நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
1954ஆம் ஆண்டு Colette இறந்தபோது, அவர் வாழ்ந்த வாழ்க்கையை உலகமே அறிந்திருந்ததால் திருச்சபையில் அவருக்கு அடக்க ஆராதனை நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டதென்றால் அது Colette இற்குத்தான்.
0 comments:
Post a Comment