மகாத்மா காந்தியின் 71 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.
யாழ்.மருத்துவமனை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன், யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ்.மாநகர ஆணையாளர் எஸ். ஜெயசீலன் மற்றும் மகாத்மா காந்தி சேவா சங்கத்தின் தலைவர், உறுப்பினர்கள், உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டு மகாத்மா காந்திக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகமும் இணைந்து அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்தன.
0 comments:
Post a Comment