ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியில் சென்ற இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்றும் ஹட்டன் பகுதியில் இருந்து நோர்வூட் பகுதிக்கு வர்தகத்திற்காக சென்று கொண்டிருந்த லொறி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் லொறியின் சாரதியும், உதவியாளரும் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் நோர்வூட் பொகவந்தலாவை ,மஸ்கெலியா காசல்ரீ உள்ளிட்ட வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின.
குறித்த பஸ் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment