கடந்த 4 வருடங்களின் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் முழு நாட்டிற்காகவும் திறப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஸ்ரீமத் மாகஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று பணி ஆரம்பிக்கும் போது மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வருடங்களின் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் முழு நாட்டிற்காகவும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏனெனில் இதுவரையான காலமும் ஒரு பிரதேச பிரச்சினைக்கு மாத்திரம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் மட்டுப்படுத்தப்பட்டு காணப்பட்டது. இந்த சிறிய காலப்பகுதியினுள் ஜனநாயகம் இல்லாமல் போன யுகமாக மாறியிருந்தது.
பொருளாதார பிரச்சினை பாரியளவு காணப்பட்டது. விவசாயம் குறித்து பேசினால் அவர்களிடம் உள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காது.
இந்த அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து சக்திகளையும் சேர்த்து கொண்டு செயற்படுவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment