பாரிசில் நடந்த மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து பொலிசார் 35 பேரை கைது செய்தனர்.
நேற்றைய தினம் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்த மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் சுமார் 50,000 பேர் கலந்துகொண்டனர். Champs-Elysees மற்றும் Place de la Bourse ஆகிய இடங்களில் இரண்டு பகுதிகளாக ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
காலையில் ஓரளவு அமைதியாக சென்ற இந்த போராட்டத்தில் பகல்வேளையில் பல இடங்களில் கலவரம் வெடித்தது. பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் வாயில் உடைக்கப்பட்டு எரியூட்டப்பட்டது.
மேலும் அப்பகுதியின் வீதிகளில் வாகனங்கள் எரியூட்டப்பட்டு, காவல்துறையினர் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், மேம்பால கடவையில் ஒரு பக்கம் மஞ்சள் மேலங்கி போராளிகள் முற்றுகையிட்டனர். அதே சமயம் பொலிசார் போராளிகளை அங்கிருந்து வெளியேற்றிக்கொண்டிருந்தபோது, குத்துச்சண்டை வீரர் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரின் முகத்தில் தாக்கியுள்ளார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொலிசாரை தாக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment