மின் கம்பத்தினால் மின்சாரம் பெற முயற்சித்த நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரகஹ, பிரதேசத்தில் கலுவலகொட பாலத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வேட்டைக்காக மின்சாரப் பொறி அமைப்பதற்கு வீதியிலுள்ள மின் கம்பத்தினால் மின்சாரம் பெற முயற்சிக்கும் போது குறித்த நபருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தியபிட்டகல்லன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே சாவடைந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இப் பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்களால் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment