இலங்கையில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் புதிய நோய்!

 இலங்கையில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ட்றைபனசோமா என்னும்  புதிய வகை நோய் ஒன்று முல்லைத்தீவில் நாய்களில் அடையாளம் காணப்பட்டது. இந்த நோய் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக பேராதனைப் பல்லைக்கழகத்தின் கால்நடை பேராசிரியர் அஸோக் தங்கொல்ல தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக மத்திய சுகாதார கால்நடை அமைச்சின் ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி அடங்கிய குழுவினர்; விசேட ஆய்விற்காக கடந்த 14 ஆம் திகதி முல்லைத்தீவிற்கு வருகை தந்திருந்தனர். .

குழுவினரால் 8 நாய்களில் பெறப்பட்ட இரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், நோய்த் தாக்கம் இல்லை என்று மத்திய சுகாதார கால்நடை அமைச்சின் ஆய்வு நிலையத்தால் அறிவுக்கப்பட்டுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி கௌரிதிலகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் முகத்துவாரம் பிரதேசத்தில் இனம் காணப்பட்ட நாய் தற்போது இறந்து விட்டது. அதேநேரம் அந்த நாய் வளர்க்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பிறநாய்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமாக கானப்பட்ட 8 நாய்களின் இரத்த மாதிரியும் ஆய்வுக்காக இந்தக் குழு எடுத்துச் சென்றது.

இரத்த மாதிரிகளின் ஆய்வு அறிக்கையில் எந்தவொரு நாயிலும் குறித்த நோய்த் தாக்கம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment