மேல் மாகாணத்தில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக விசேட வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்றினையும் நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.
மேல் மாகாண ஆளுநராக பதவியேற்ற அசாத் சாலி ஆதவன் செய்திப் பிரிவுக்கு இன்று வழங்கிய விசேட நேர்காணலிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “ பொலிஸ் பிரிவிலுள்ள அதிகாரிகளையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரையும் புதிய திட்டமிடலில் இணைக்க வுள்ளோம்.
மேல் மாகாணம் முழுவதும் போதைப்பொருள் தயாரித்தல், பொதிசெய்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு புது திட்டம் வகுக்கவுள்ளோம்.
பிரதானமாக பாடசாலைகள் மற்றும் மத ஸ்தலங்களை அண்டிய பகுதிகளில் இவ்வாறான போதைப்பொருள் விற்பனைகளை முழுமையாக கட்டுப்படுத்த முடிவெடுத்துள்ளோம்.
அந்தவகையில், மதஸ்தலங்கள் ஒருங்கிணைந்து அந்தந்த பகுதிகளின் சூழலைப் பாதுகாக்கவும் அறிவுறுத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதேவேளை, மேல்மாகாணத்தில் காணப்படும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளையும் ஒழுங்காக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள் ளதாக அசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment